உலகக் கோப்பையில் 5ஆவது லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷான், ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். பின்னர் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் விராட் கோலி 67ஆவது அரைசதம் அடிக்க, கேஎல் ராகுல் 16ஆவது அரைசதத்தை அடித்தார். இதையடுத்து விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை விளையாடிய கேஎல் ராகுல் 97 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
இந்தியா 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
உலகக் கோப்பை முதல் போட்டியில் இந்திய அணி சாதனைகள்:
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணி விளையாடிய முதல் போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், 2007 ஆம் ஆண்டு மட்டும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டிகள்:
2003 - வெற்றி vs நெதர்லாந்து
2007 - தோல்வி vs வங்கதேசம்
2011 - வெற்றி vs வங்கதேசம்
2015 - வெற்றி vs பாகிஸ்தான்
2019 - வெற்றி vs தென் ஆப்பிரிக்கா
2023 - வெற்றி vs ஆஸ்திரேலியா*
ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை முதல் போட்டிகள்:
2003 - வெற்றி vs பாகிஸ்தான்
2007 - வெற்றி vs ஸ்காட்லாந்து
2011 - வெற்றி vs ஜிம்பாப்வே
2015 - வெற்றி vs இங்கிலாந்து
2019 - வெற்றி vs ஆப்கானிஸ்தான்
2023 - தோல்வி vs இந்தியா*
சென்னையில் ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா
வெற்றி vs இந்தியா, 1987
வெற்றி vs ஜிம்பாப்வே 1987
வெற்றி vs நியூசிலாந்து, 1996
தோல்வி vs இந்தியா, 2023*
3 விக்கெட் இழந்து 2 ரன் எடுத்திருந்த போதும் ஒரு நாள் போட்டியில் வெற்றி
2 ரன்கள்- இந்தியா vs ஆஸ்திரேலியா, சென்னை 2023
4 ரன்கள் - இலங்கை vs ஜிம்பாப்வே, அடிலெய்டு, 2004
4 ரன்கள் – இலங்கை vs வங்கதேசம், மிர்பூர், 2009
5 ரன்கள் - இலங்கை vs நியூசிலாந்து, டாக்கா, 1998