IND vs SL: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

Published : Jan 14, 2023, 08:24 PM IST
IND vs SL: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி ஜனவரி 15ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

முதலிரண்டு போட்டிகளிலும் தோற்ற இலங்கை அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் உள்ளது. ஆனால் அதேவேளையில், தொடரை வென்றுவிட்ட இந்திய அணி, கடைசி போட்டியில் வெற்றி கட்டாயம் இல்லாமல் இறங்குவதால் சில மாற்றங்களுடன் களமிறங்கும்.

மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் ரோஹித், கோலி..! பிசிசிஐ கள்ள மௌனம்

இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் 3 மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அந்த இடத்தில் இறக்கப்படலாம். அதேபோல ஸ்பின் ஆல்ரவுண்டராக அக்ஸர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் ஆட வாய்ப்பு பெறலாம். உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படலாம்.

ரஞ்சி தொடரில் நல்லா ஆடுறவங்களுக்கு மதிப்பே இல்லையா? அந்த பையனை எப்படி புறக்கணிக்கலாம்? இர்ஃபான் பதான் ஆதங்கம்

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!