ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 2ம் இடத்திற்கு முன்னேறிய நிலையில், தென்னாப்பிரிக்கா 3ம் இடத்திற்கு பின் தங்கியது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். 2019 - 2021 காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவும் நியூசிலாந்தும் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலில் மோதின. ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அதற்கடுத்து 2021-2023க்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்துவருகிறது. இந்த காலக்கட்டத்தில் நட்க்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தான். இந்த முறை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின. ஆஸ்திரேலியா முதலிடத்திலும் தென்னாப்பிரிக்கா 2ம் இடத்திலும் இருந்தன.
IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 75 சதவிகிதத்திலிருந்து 60% ஆக குறைந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்று 76.92 சதவிகிதத்துடன் முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது.
IPL 2023 Mini Auction: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்ற அதேவேளையில், ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா தோற்றது. 52.08 வெற்றி சதவிகிதத்திலிருந்து 55.77 சதவிகிதத்திற்கு உயர்ந்த இந்திய அணி 4ம் இடத்திலிருந்து 2ம் இடத்திற்கு முன்னேற, 60 சதவிகிதத்திலிருந்து 54.55 சதவிகிதமாக சரிவை சந்தித்த தென்னாப்பிரிக்க அணி 3ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது. தென்னாப்பிரிக்க அணி அடுத்த 2 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் மற்றும் அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்கவுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும்.