கப்பா டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு இது சாத்தியம்!

By Rsiva kumarFirst Published Dec 18, 2022, 11:52 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்றால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 2ஆவது பிடிக்கும்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐசிசி  டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா ஒரு இடம் முன்னேறி 3 ஆவது இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து 2ஆவது இடம் பிடிக்க கப்பா டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்றால் மட்டுமே இது சாத்தியமாகும். ஐசிசி  டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2ஆவது இடத்திலும் உள்ளது. 

IND vs BAN First Test: அக்‌ஷர், குல்தீப் சுழலில் சுருண்ட வங்கதேசம்: முதல் டெஸ்டில் முத்திரை பதித்த இந்தியா!

தற்போது கப்பாவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதையடுத்து, மீண்டும் தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடர்ந்து சறுக்கல் தான். ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா அணி 2ஆவது இன்னிங்ஸில் 99 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு வெறும் 33 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

FIFA World Cup 2022: ஃபைனலில் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் பலப்பரீட்சை..! உலக கோப்பை யாருக்கு..? ஓர் அலசல்

இது ஆஸ்திரேலியா அணிக்கு எளிதான ஸ்கோர் தான். ஆகையால், கண்டிப்பாக இந்தியா ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ஆவது இடம் பிடிக்கும் என்பது உறுதி. இது தவிர இந்தியாவுக்கு 5 டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. ஒன்று வரும் 22ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக தாகாவில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலியா அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

INDW vs AUSW: கடைசியில் காட்டடி அடித்து போராடிய ரிச்சா கோஷ்! த்ரில் வெற்றி பெற்று டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா

click me!