INDW vs AUSW: கடைசியில் காட்டடி அடித்து போராடிய ரிச்சா கோஷ்! த்ரில் வெற்றி பெற்று டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Dec 17, 2022, 10:21 PM IST
Highlights

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என டி20 தொடரை வென்றது.
 

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்த நிலையில், 4வது டி20 போட்டி இன்று நடந்தது. தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, ரேணுகா தாகூர் சிங்.

IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), பெத் மூனி, தாலியா மெக்ராத், எலைஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னெர், கிரேஸ் ஹாரிஸ், அன்னாபெல் சதர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலானா கிங், மேகன் ஸ்கட், டார்சி ப்ரௌன்.

முதலில் பேட்டிங்  ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைஸா ஹீலி 21 பந்தில் 30 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்றார். முதல் 2 போட்டிகளில் 80 ரன்களுக்கும் மேல் குவித்த பெத் மூனி இந்த போட்டியில் 10 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மெக்ராத்தும் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கார்ட்னெர் அதிரடியாக ஆடி 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 49 ரன்களை விளாசினார். எலைஸ் பெர்ரி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்களையும், கிரேஸ் ஹாரிஸ் அடித்து ஆடி 12 பந்தில் 27 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

189 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா(16) மற்றும் ஷஃபாலி வெர்மா(20) ஆகிய இருவருமே ஏமாற்றமளிக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸும் 8 ரன்னுக்கு நடையை கட்டினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 30 பந்தில் அதிரடியாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்தார். கடைசியில் ரிச்சா கோஷ் காட்டடி அடித்து 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்தார். ஆனாலும் இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 

IPL 2023 Mini Auction: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

இந்த போட்டியில் ஜெயித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என டி20 தொடரை வென்று அசத்தியது.
 

click me!