INDW vs AUSW: 4வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா..? தடுக்குமா இந்தியா..?

Published : Dec 17, 2022, 07:12 PM IST
INDW vs AUSW: 4வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா..? தடுக்குமா இந்தியா..?

சுருக்கம்

ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.   

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளையும், இந்தியா ஒரு வெற்றியையும் பெற்றது. 2-1 என ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியிலும் ஜெயித்து 3-1 என தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன.

ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்

இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, ரேணுகா தாகூர் சிங்.

IPL 2023 Mini Auction: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), பெத் மூனி, தாலியா மெக்ராத், எலைஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னெர், கிரேஸ் ஹாரிஸ், அன்னாபெல் சதர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலானா கிங், மேகன் ஸ்கட், டார்சி ப்ரௌன்.
 

PREV
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?