PAK vs ENG: 3வது டெஸ்ட்டில் பாபர் அசாம், சல்மான் பொறுப்பான அரைசதம்! முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இங்கிலந்து

By karthikeyan VFirst Published Dec 17, 2022, 6:41 PM IST
Highlights

பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் அடித்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை இழந்தது.
 

பாகிஸ்தான்  - இங்கிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்த தொடருடன் அசார் அலி ஓய்வு பெறுவதால் கடைசி டெஸ்ட்டில் ஆட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், ஷான் மசூத், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், சௌத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது.

முதல் டெஸ்ட்டில் ஆஸி.,யிடம் மண்டியிட்டு சரணடைந்த தென்னாப்பிரிக்கா..! சதத்தை நோக்கி டிராவிஸ் ஹெட் ஆட்டம்

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, ஆலி ராபின்சன், மார்க் உட், ஜாக் லீச்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷான் மசூத் 37 பந்தில் 30 ரன்கள் அடித்து நன்றாக தொடங்கினார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 30 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். தனது கடைசி டெஸ்ட்டில் ஆடும் அசார் அலி 45 ரன்கள் அடித்து 5 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். பாபர் அசாம் 78 ரன்களும், பின்வரிசையில் ஆடிய அகா சல்மான் அரைசதம் அடித்து 56 ரன்களும் அடித்தனர்.  பாபர் அசாம், சல்மான் அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணி. 

இங்கிலாந்து அணி சார்பில் அந்த அணியின் ஸ்பின்னர் ஜாக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி, அப்ரார் அகமது வீசிய முதல் ஓவரிலேயே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன் அடித்துள்ளது.
 

click me!