வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் இடம் பெறாத நிலையில், அவருடைய ஜெர்சி அணிந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி தற்போது பார்படாஸி உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலமாக முதல் முறையாக இந்திய அணி டிரீம் 11 ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
Surya wearing the Jersey of Sanju Samson. pic.twitter.com/xTUTwrmyhk
— Johns. (@CricCrazyJohns)
வெஸ்ட் இண்டீஸ்:
ஷாய் ஹோப் (கேப்டன் – விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவால், ரோமரியோ ஷெப்பர்டு, யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி
திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முகேஷ் குமார், இந்தப் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளார். இதுனால் வரையிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த சஞ்சு சாம்சனுக்க் இந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஐபிஎல் தொடருக்கு பிறகு ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்ப வந்துள்ளார்.
ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!
உம்ரான் மாலிக்கும் அணியில் இடம் பெற்றுள்ளார். குல்தீப் யாதவ்வும் அணியில் இடம் பெற்றுள்ளார். முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், அஜின்க்யா ரஹானே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறாத நிலையில், சூர்யகுமார் யாதவ் அவரது ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் வந்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு நடந்த எந்த தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்ற அவருக்கு முதல் ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hardik Pandya strikes in his 2nd over.
He gets Mayers, Vice-Captain on a roll. pic.twitter.com/Ek5LxcoDba