தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?

Published : Jul 26, 2023, 05:37 PM IST
தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?

சுருக்கம்

தோனியின் மூத்த சகோதரியான ஜெயந்தி குப்தா, அவரது நண்பரான கௌதம் குப்தாவை திருமணம் செய்திருக்கிறார்.

இந்திய அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் எம்.எஸ்.தோனி. டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார். தோனியின் வாழ்க்கையில் அவரது அடைந்த வெற்றிக்கு அவரது மூத்த சகோதரி ஜெயந்தி குப்தாவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

Asian Games 2023 QF, SF: காலிறுதி, அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!

இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் மூலமாக வருத்திற்கு ரூ.50 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். தோனி கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னதாக அவரது குடும்பம் மிகவும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்ததாக இருந்தது. அவரது தந்தை பான் சிங் நடுத்தர அளவிலான அரசு வேலையில் பணிபுரிந்தார்.

திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

ஜெயந்தி குப்தா, தோனியின் மூத்த சகோதரி. தோனிக்கு இருந்த கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவித்து அவருக்கு ஆதரவாக இருந்தார். பான் சிங்கிற்கு தோனி கிரிக்கெட் விளையாட நம்பிக்கை இல்லாத போது தோனிக்கு ஆதரவாக ஜெயந்தி குப்தா இருந்தார். என்னதான் தோனிக்கு ரூ.1040 கோடி வருமானம் வந்தாலும், அவரது சகோதரி சுயவிவரம் காரணமாக ஊடகங்களிலிருந்து விலகி இருக்கவே முயற்சிக்கிறார்.  ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

தோனியின் நண்பர்களில் ஒருவரான கௌதம் குப்தாவை மணந்துள்ளார். கௌதம் குப்தா, தோனியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். ஆரம்பகாலத்தில் தோனிக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை தடுத்த ஜோ ரூட்..! கண்களை காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் நன்றி!
ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!