ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
இதில் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார். ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 10 போட்டிகளில் விளையாடிமொத்தமாக 159 ரன்கள் மட்டுமே எடுத்த ஜோஷ் இங்கிலிஸ் இந்தப் போட்டியில் 47 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச போட்டியில் தனது முதல் சதம் அடித்து சாதனை படைத்தார். கடைசியாக இங்கிலிஸ் 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
போன வாரம் தான அடி வாங்குனேன் – திரும்ப திரும்ப அடிக்கும் ஆஸி – ஆஸ்திரேலியா 208 ரன்கள் குவிப்பு!
இறுதியாக ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், முதல் ஓவரை யஷஸ்வி எதிர்கொண்டார். ஸ்டோய்னிஸ் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4, 0,6, 0 என்று அடித்த யஷஸ்வி 5ஆவது பந்தை லெக் ஸைடு திசையில் அடித்து விட்டு 2ஆவது ரன்னிற்கு ஓட முயற்சித்து பின் வாங்கவே, மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் பாதி தூரம் வர அங்கு பீல்டிங் செய்த நாதன் எல்லிஸ் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் கைக்கு வீச, அவரும் சரியாக ரன் அவுட் செய்யவே ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பந்து கூட பிடிக்காமல் டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
டீப் ஃபேக்: போலி புகைப்படங்கள், வீடியோக்கள்: சீக்கிரம் நடவடிக்கை எடுங்க – சாரா டெண்டுல்கர் அறிக்கை!
இதன் மூலமாக டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்த 3ஆவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். இதற்கு முன்னதாக பும்ரா மற்றும் அமித் மிஸ்ரா இருவரும் இடம் பெற்றிருந்தனர். அதன் பிறகு ஜெய்ஸ்வாலும் 21 ரன்களில் வெளியேற இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து அதிரடி காட்டினார். இதில், இஷான் கிஷான் 37 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், 39 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் தன் பங்கிற்கு 29 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் கேப்டனாக அறிமுகமாகி தனது முதல் டி20 போட்டியிலேயே அரைசதம் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கேஎல் ராகுல் டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகமாகி அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தார். இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் இன்னமும் ஐசிசி ஆண்கள் டி20 ரேங்கிங் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The whole Vizag stadium stands tall for the Captain.
- SKY is the main man in T20I. 🔥 pic.twitter.com/0TZI5z78Fy