ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பந்து கூட பிடிக்காமல் டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
போன வாரம் தான அடி வாங்குனேன் – திரும்ப திரும்ப அடிக்கும் ஆஸி – ஆஸ்திரேலியா 208 ரன்கள் குவிப்பு!
இதில் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார். ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 10 போட்டிகளில் விளையாடிமொத்தமாக 159 ரன்கள் மட்டுமே எடுத்த ஜோஷ் இங்கிலிஸ் இந்தப் போட்டியில் 47 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச போட்டியில் தனது முதல் சதம் அடித்து சாதனை படைத்தார். கடைசியாக இங்கிலிஸ் 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், முதல் ஓவரை யஷஸ்வி எதிர்கொண்டார். ஸ்டோய்னிஸ் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4, 0,6, 0 என்று அடித்த யஷஸ்வி 5ஆவது பந்தை லெக் ஸைடு திசையில் அடித்து விட்டு 2ஆவது ரன்னிற்கு ஓட முயற்சித்து பின் வாங்கவே, மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் பாதி தூரம் வர அங்கு பீல்டிங் செய்த நாதன் எல்லிஸ் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் கைக்கு வீச, அவரும் சரியாக ரன் அவுட் செய்யவே ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பந்து கூட பிடிக்காமல் டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்த 3ஆவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்திற்கு எதிராக அமித் மிஸ்ரா இருவரும் டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர். இதில், இருவரும் பவுலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
A diamond duck for Ruturaj Gaikwad. pic.twitter.com/evoDm7kiRY
— Mufaddal Vohra (@mufaddal_vohra)