மன்னிக்கவும், அது என்னுடையது அல்ல; வேடிக்கையான பதிவிற்கு காத்திருங்கள் - சூர்யகுமார் யாதவ்!

By Rsiva kumarFirst Published Mar 25, 2023, 6:46 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவ் நிசான் 1 டன் காரை ஓட்டி செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது நான் இல்லை என்று  அவர் கூறியுள்ளார்.
 

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தார். இதே போன்று 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் அதே மாதிரியாக மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக்கில் வெளியேறினார். இதையடுத்து கடைசியாக சென்னையில் நடந்த ஒரு நாள் போட்டியில் ஆஷ்டர் அகர் ஓவரில் கிளீன் போல்டு முறையில் கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளில் கோலடன் டக் முறையில் ஆட்டமிழந்தவர்களின் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 6ஆவது இடம் பிடித்தார்.

இதையடுத்து, வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், மும்பையில் ஹல்க் எனப்படும் நிசான் 1 டன் காரில் சூர்யகுமார் யாதவ் சென்றதாக ஒரு வீடியோசமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பகிர்ந்து மன்னிக்கவும், அது என்னுடையது அல்ல. அதை பார்த்ததும் என்னை டேக் செய்து பதிவிட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், உற்சாகமான அப்டேட் விரைவில் வெளிவரும் என்றும், கிரேஸியான பதிவிற்கு காத்திருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக புதிய டாட்டூ போட்டுக் கொண்ட விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!

இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சூர்யகுமார் யாதவ் ஹல்க் என்று சொல்லப்படும் நிசான் 1 காரை புதிதாக வாங்கியுள்ளார். ஜோங்கா என்று பிரபலமாக அறியப்படும் நிசான் 1 டன் ஜீவ் கடந்த 1969 முதல் 1999 வரை இந்திய ஆயுதப் படை வீரர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம்!

click me!