4ஆவது இடத்துல ஃபார்முல இல்லாத ஒருத்தர போய் 7ஆவது இடத்துல இறக்கலாமா? அஜய் ஜடேஜா சரமாரியாக கேள்வி!

By Rsiva kumar  |  First Published Mar 25, 2023, 4:24 PM IST

சூர்யகுமார் யாதவ்வை 7ஆவது இடத்தில் களமிறக்கி அணி நிர்வாகம் மோசமான செயலை செய்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார். 
 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடர்ந்து 2 ஒரு நாள் போட்டிகளில் 4ஆவதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இந்த கடைசி ஒரு நாள் போட்டியில் 7ஆவது வீரராக மாற்றி களமிறக்கப்பட்டார்.

ரன் அவுட் ஆனபோதும் ஜிங் பெயில்ஸ் பேட்டரி பிரச்சனையால் தப்பித்த கருணாரத்னே!

Tap to resize

Latest Videos

ஆனால், ஃபார்மிலேயே இல்லாத ஒருவரை இப்படி 7ஆவது வீரராக எப்படி களமிறக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார். எப்போதும் போன்று அவரை 4ஆவது இடத்திலேயே களமிறக்கியிருக்கலாம். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு வீரர் ஃபார்மில் இருக்கும் போது அவரை எங்கு வேண்டுமானாலும் களமிறக்கி இருக்கலாம். ஆனால், ஃபார்ம் இல்லாத ஒரு வீரரை பின் வரிசையில் களம் இறக்குவது அவரது மனதில் பல்வேறு விதமான கேள்விகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும். 

ஹர்திக் பாண்டியா இல்லையென்றாலும் எங்ககிட்ட இன்னொருவர் இருக்காரு - குஜராத் டைட்டன்ஸ் இயக்குநர் பேட்டி!

அப்படி களமிறக்கும் போது அந்த வீரரின் ஆட்டத்தை பாதிக்கும். 4ஆவது இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வீரர் ஃபார்மில் இல்லாத நிலையில், அவரை 7ஆவது இடத்தில் களம் இறக்குவது என்பது அவ்வளவு சரியானது இல்லை. வீரருக்கு கம்போர்ட் பீல் வருவது மேல் வரிசையில் ஆடும் போது தான். அப்படியிருந்த நிலையில், சூர்யகுமாரை டாப் ஆர்டரில் களமிறக்கியிருந்தால் அவர் ரன்களை குவித்திருப்பார். அந்த நேரத்தில் போட்டியில் எந்த அழுத்தமும் இல்லை. அந்த நேரத்தில் அவர் நிலைத்து நின்று ஆடி ஃபார்மிற்கு வருவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால், அணி நிர்வாகம் அவரை பின் வரிசையில் இறக்கிவிட்டு இப்படியொரு மோசமான செயலை செய்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம்!

click me!