AFG vs PAK: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி..!

By karthikeyan VFirst Published Mar 25, 2023, 4:01 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆஃப்கானிஸ்தான் அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடி முடித்த பின் பாகிஸ்தான் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

பாகிஸ்தான் அணி: 

சயிம் அயுப், முகமது ஹாரிஸ், அப்துல்லா ஷாஃபிக், டயாப் தாஹிர், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரஃப், இமாத் வாசிம், நசீம் ஷா, ஜமான் கான், ஈசானுல்லா.

IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்

ஆஃப்கானிஸ்தான் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, கரிம் ஜனத், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், குல்பாதின் நைப், ரஷீத் கான் (கேப்டன்), முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அடி அடி என்று அடித்து 240 ரன்களை அசால்ட்டாக அடித்து கெத்து காட்டிய பாகிஸ்தான் வீரர்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பினர். முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாகவே  இமாத் வாசிம் 18 ரன்கள் தான் அடித்தார். அவரும் மந்தமாக ஆடி 32 பந்தில் 18 ரன்கள் அடித்தார். கேப்டன் ஷதாப் கான் 18 பந்தில் 12 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் அனைவருமே பேட்டிங்கில் சொதப்ப அந்த அணி 20 வெறும் 92 ரன்கள் மட்டுமே அடித்தது.

ஆஃப்கானிஸ்தான் அணியில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி, முஜீபுர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகிய மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! 4 வெளிநாட்டு வீரர்களுமே மேட்ச் வின்னர்கள்

93 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 38 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

click me!