லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான 4ஆவது சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று சின்ன தல என்று அழைக்கப்படும் அளவிற்கு தோனி படைக்கு பக்க பலமாக இருந்தார். குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார். இவர், 200க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி, 5000க்கும் அதிகமாகவே ரன்கள் சேர்த்துள்ளார்.
களத்தில் இறங்கும் வாஷிங்டன் சுந்தர்: சீகேம் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங்!
கடந்த 2020 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா சென்னை அணியிலிருந்து விலகினார். அதன் பிறகு ஒரு சீசன் மட்டுமே விளையாடிய சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதன்பிறகு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஐபிஎல்கிரிக்கெட் தொடரைப் போன்று இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொடரின் 4ஆவது சீசன் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் தற்போது நடந்து வருகிறது. இதில், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், தம்புள்ளா ஆரா, காலி டைட்டன்ஸ், ஜாஃப்னா கிங்ஸ் (யாழ்ப்பாண மன்னர்கள்), கண்டி ஃபால்கன்ஸ் என்று 5 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் இடம் பெறுவதற்காக சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் – 15 பேர் கொண்ட இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங் கணிப்பு!