தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் 22 வயதான மோகித் ஹரிஹரன் வலது மற்றும் இடது கையால் பந்து வீசி அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் நேற்று கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில், டிஎன்பிஎல் 2023 தொடரின் 7ஆவது சீசனின் முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் – 15 பேர் கொண்ட இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங் கணிப்பு!
இதைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎல் தொடரின் 2ஆவது போட்டி நடந்தது. இதில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் குவித்தது.
3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியாவின் முதல் டெஸ்ட் சீரிஸ் அறிவிப்பு!
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் ஃபால் இருவரும் களமிறங்கினர். இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மோஹித் ஹரிஹரன் பந்து வீச வந்தார். 22 வயதான இவர், வலது கை பேட்ஸ்மேனான ஜெகதீசன் பேட்டிங் செய்த போது அவருக்கு இடது கையிலும் இடது கை பேட்ஸ்மேனான பிரதோஷ் ஃபாலிற்கு வலது கையிலும் பந்து வீசி அசத்தினார்.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!
ஒரு கட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான என் ஜெகதீசனை தனது அபாரமான பந்து வீச்சால் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆர் எஸ் மோஹித் ஹரிஹரன் 3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 31 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். எனினும், வலது மற்றும் இடது கையால் பந்து வீசி அசத்திய ஹரிஹரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:
பாபா அபரஜித் (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ராஜகோபால் சதீஷ், உதிரசாமி சசிதேவ், பிரதோஷ் பால், எம் விஜூ அருள், எஸ் ஹரிஷ் குமார், சஞ்சய் யாதவ், ராமலிங்கம் ரோகித், ராஹில் ஷா, எம். சிலம்பரசன்
சேலம் ஸ்பார்டன்ஸ்:
கௌசிக் காந்தி (கேப்டன்), எஸ் அபிஷேக், ஆர் எஸ் மோகித் ஹரிஹரன், அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), மான் கே ஃபாப்னா, சன்னி சந்து, அபிஷேக் தன்வர், முகமது அத்னான் கான், சச்சின் ரதி, எம் கணேஷ் மூர்த்தி, ஆகாஷ் சும்ரா,
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு காஞ்சி வீரான்ஸ் அணியில் இடம் பெற்ற மோஹித் ஹரிஹரன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக இடது, வலது கைகளிலும் பந்து வீசி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Yes. Believe what you are seeing. refreshing moment of the day. pic.twitter.com/4RrgSBsMXW
— TNPL (@TNPremierLeague)