முதல் முறையாக மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு!

By Rsiva kumar  |  First Published Jun 14, 2023, 11:51 AM IST

முதல் முறையாக மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


ஜப்பானில் ககாமிகஹரா பகுதியில் 8ஆவது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்தது. இதில், இந்தியா, தென் கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீன தைபே ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, கஜகஜஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்று விளையாடி வந்தன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டியில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

கடைசி ஓவரில் 4 நோபால் ஒரு வைடு உள்பட 11 பந்துகள் வீசி 26 ரன்கள் கொடுத்த அபிஷேக் தன்வார்!

Tap to resize

Latest Videos

அதன்படி, இந்தியா தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கணக்கிலும், மலேசியாவை 2-1 என்ற கணக்கிலும், தென் கொரியாவை 2-2 என்ற கணக்கிலும், சீனா தைபே அணியை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதே போன்று ஜப்பான் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில், இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளும், 2ஆவது அரையிறுதிப் போட்டியில் சீனா மற்றும் தென் கொரியா அணிகளும் மோதின.

எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறாரா? வைரலாகும் சிஎஸ்கே வீடியோ!

இதில், இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தென் கொரியாவும் 2-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இந்தியா மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கடைசி வரை போராடி சாதனையை கோட்டை விட்ட முகமது அத்னான் கான்: சேப்பாக்கம் எளிதில் வெற்றி!

இதில் அன்னு 22ஆவது நிமிடத்தில் ஒரு அடிக்க, நீலம் 41ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். ஜூனியர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், துணை பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்ற்ய் ஹாக்கி இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரூம் கிடைக்காமல் 3 மணி நேரமாக காத்திருந்த இலங்கை வீரர்கள்!

இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட நீலம், கூறியிருப்பதாவது: எங்களது அணிக்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். இந்த வெற்றியின் மூலமாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டோம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், தென் கொரியாவை வீழ்த்தி முதல் முறையாக ஹாக்கி சாம்பியனான இந்திய அணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

A Triumphant Return 🌟

Indian Junior Women's Team were received with love, adoration and bouquets of flowers when they returned to India after clinching their Maiden Women's Junior Asia Cup 2023 title. pic.twitter.com/1ZBvRJeV0J

— Hockey India (@TheHockeyIndia)

 

Perfect Home Coming of the Champions 😍 https://t.co/Y8DQjlNUGH

— Hockey India (@TheHockeyIndia)

 

click me!