டி20 உலக கோப்பை: பும்ராவிற்கு நிகரான மாற்று வீரர் ஷமி இல்ல.. சுரேஷ் ரெய்னா அதிரடி

By karthikeyan VFirst Published Oct 18, 2022, 2:48 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது ஷமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பும்ராவிற்கு நிகரான மாற்று வீரர் ஷமி கிடையாது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு கண்டிப்பாகவே பேரிழப்பு.

ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டரான ஜடேஜா மற்றும் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பும்ரா ஆகிய இருவரும் ஆடாதது கண்டிப்பாகவே பெரிய பின்னடைவு. ஜடேஜாவின் இடத்தில் அக்ஸர் படேலும், பும்ராவிற்கு மாற்று வீரராக சீனியர் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி எடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்.. புதிய நிர்வாகிகளின் முழு பட்டியல்

டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என ஆட்டத்தின் அனைத்து சூழல்களிலும்  அதற்கேற்ப அருமையாக பந்துவீசக்கூடியவர் பும்ரா. சாமர்த்தியமாகவும், அதேவேளையில் 140 கிமீ வேகத்திற்கு மேலும் வீசக்கூடிய பும்ரா, ஆஸ்திரேலியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். ஆனால் அவர் ஆடாதது பெரும் பின்னடைவு.

பும்ரா ஆடவில்லை என்றாலும், அவருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள ஷமியும் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் தான் என்றாலும், டெத் ஓவர்களில் பும்ரா அளவிற்கு சிறப்பாக பந்து வீசுவாரா என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரைவீசிய ஷமி, 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நம்பிக்கையளித்தார்.

சச்சின் டெண்டுல்கரே பும்ராவிற்கு சரியான மாற்று வீரர் ஷமி என்று கருதும் நிலையில், சுரேஷ் ரெய்னா அப்படியெல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, பும்ராவிற்கு சிறப்பான மாற்று வீரர் ஷமி என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் பும்ரா, ஜடேஜா மாதிரியான வீரர்களுக்கு மாற்றே கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இருவரும் இந்தியாவிற்காக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியிருக்கின்றனர் .

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு சரியான மாற்று வீரரா முகமது ஷமி..? சச்சின் டெண்டுல்கர் அலசல்

இருக்கிற ஆப்சன்களில் ஷமி சிறப்பான தேர்வு. ஷமியும் நல்ல பவுலர்; நன்றாக ஆடியிருக்கிறார். இப்போது நல்ல ஃபார்மிலும் உள்ளார். பயமில்லாமல் துணிச்சலாக வெற்றி வேட்கையுடன் ஆடவேண்டும் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.
 

click me!