டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறாத 2 பெரிய அணிகள் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி. தகுதிச்சுற்றில் க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி முதல் போட்டியில் நமீபியாவிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
அண்மையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய பெரிய அணிகளை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆசிய சாம்பியன் இலங்கை அணி, நமீபியாவிடம் தோற்றது பெரும் அதிர்ச்சியளித்தது.
undefined
இதையும் படிங்க - ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ்..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில், சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீரவேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. அமீரகம் சிறிய அணி தான் என்றாலும் வெற்றி கட்டாயத்தில் ஆடுவதால் இலங்கை அணிக்கு அழுத்தம் அதிகம் என்பதால் கவனமுடன் ஆடியாகவேண்டும். இந்த போட்டியில் டாஸ் வென்ற அமீரக அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயத்தால் குணதிலகா இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சாரித் அசலங்கா ஆடுகிறார்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு சரியான மாற்று வீரரா முகமது ஷமி..? சச்சின் டெண்டுல்கர் அலசல்
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, பானுகா ராஜபக்சா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா.