டி20 உலக கோப்பை: நமீபியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி..! சூப்பர் 12 வாய்ப்பை வலுப்படுத்திய நெதர்லாந்து

Published : Oct 18, 2022, 12:58 PM ISTUpdated : Oct 18, 2022, 01:38 PM IST
டி20 உலக கோப்பை: நமீபியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி..! சூப்பர் 12 வாய்ப்பை வலுப்படுத்திய நெதர்லாந்து

சுருக்கம்

டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் க்ரூப் ஏ புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.  

டி20 உலக கோப்பை தொடரில் இன்றைய தகுதிப்போட்டியில் நமீபியா - நெதர்லாந்து அணிகள் மோதின. க்ரூப் ஏ பிரிவில் தங்களது முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய நமீபியாவும், ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்திய நெதர்லாந்தும் இன்று மோதின.

ஜீலாங்கில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் போட்டியில் ஆசிய சாம்பியன் இலங்கையை வீழ்த்திய நம்பிக்கையுடன் களமிறங்கிய நமீபியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ராவுக்கு சரியான மாற்று வீரரா முகமது ஷமி..? சச்சின் டெண்டுல்கர் அலசல்

நமீபியா அணி:

மைக்கேல் வான் லிங்கென், டிவான் லா காக், ஸ்டீஃபன் பார்ட், ஜான் நிகோல் லாஃப்டி-ஈட்டான், கெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஜான் ஃப்ரைலிங்க், டேவிட் வீசா, ஜேஜே ஸ்மிட், ஸேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), பெர்னார்டு ஷால்ட்ஸ், பென் ஷிகாங்கோ.

நெதர்லாந்து அணி:

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடௌட், பாஸ் டி லீடே, காலின் ஆக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோலாஃப் வாண்டர் மெர்வி, டிம் பிரிங்கிள், டிம் வாண்டர் கக்டென், ஃப்ரெட் கிளாசன், பால் வான் மீகெரென்.

முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணி அடித்து ஆடாமல் மந்தமாக பேட்டிங் ஆடியது. அந்த அணியில் கடந்த போட்டியை போலவே, இந்த போட்டியிலும் ஜான் ஃப்ரைலிங்க் தான் பொறுப்புடன் ஆடி அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார்.  பார்ட் 19 ரன்களும், கேப்டன் எராஸ்மஸ் 16 ரன்களும், டேவிட் வீசா 11 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே அடித்தது நமீபியா அணி.

122 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஓடௌட் மற்றும் விக்ரம்ஜித் சிங்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 8.2 ஓவரில் 59 ரன்களை சேர்த்தனர். ஓடௌட் 35 ரன்களும், விக்ரம்ஜித் 39 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் பாஸ் டி லீட் ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் டாம் கூப்பர் (6), ஆக்கர்மேன்(0), கேப்டன் எட்வர்ட்ஸ்(1) ஆகியோர் மளமளவென ஆட்டமிழந்தனர். ஆனால் லீட் 30 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

இதையும் படிங்க - ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ்..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி, க்ரூப் ஏ புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. 
 

PREV
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..