
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலிக்கும் போது பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றி வந்துள்ளனர். இவ்வளவு ஏன், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை துபாயில் வைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவே இன்று கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் விருந்தினர் மாளிகையில் வைத்து நடந்த கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தனது மகளுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், சுனில் ஷெட்டி அதிகாரப்பூர்வமாக இன்று நான் மாமனார் ஆகிவிட்டேன் என்று கூறி மகிழ்ந்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமண நிகழ்ச்சிக்கு கிருஷ்ணா ஷெராஃப், டயானா பென்டி, அனுஷ்கா ரஞ்சனா மற்றும் அவரது கணவர் ஆதித்யா சீல் மற்றும் அன்சுல் கபூர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இஷாந்த் சர்மா மற்றும் வருண் ஆரோன் ஆகிய கிரிக்கெட் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக கேஎல் ராகுல் வீடு வண்ண விளங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!
ஆண்டுதோறும் நடந்து வரும் ஐபிஎல் சீசனில் 16ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.