IND vs NZ: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்..? உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jan 23, 2023, 6:42 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவரும் இந்திய அணி, அதற்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்து அந்த வீரர்களை சுழற்சி முறையில் இறக்கி ஆடிவருகிறது. சீனியர் வீரரான ஷிகர் தவானை கழட்டிவிட்டு, இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்கி ஆடிவருகிறது. அவரும் நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.

ஷாஹித் அஃப்ரிடி டைம் ஓவர்.. பாகிஸ்தான் அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவர் நியமனம்

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை இந்தூரில் நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஷர்துல் தாகூருக்கு பதிலாக இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் சேர்க்கப்படலாம். அதைத்தவிர வேறு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் வருவார்களே தவிர, மற்றபடி இதுதான் ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன். அதனால் தொடரை வென்றிருந்தாலும், கடைசி போட்டியில் பரிசோதனைக்காக தேவையில்லாத மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை.

ஐசிசி தேர்வு செய்த 2022ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்..! 3 இந்திய வீரர்களுக்கு இடம்

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
 

click me!