IND vs NZ 2nd ODI போட்டியை காண ஆளுநரை அழைக்க மறந்த பிசிசிஐ: ராஜ்பவனில் அடித்த எச்சரிக்கை மணி!

By Rsiva kumarFirst Published Jan 23, 2023, 5:18 PM IST
Highlights

கடந்த 21 ஆம் தேதி நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டிக்கு சட்டீஸ்கர் ஆளுநரை அழைக்காததால் பிசிசிஐ மீது விமர்சனம் எழுந்துள்ளது.
 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா 51 ரன்களும், விராட் கோலி 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் 40 ரன்களுடனும், இஷான் கிஷான் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வணக்கம் சென்னை: ரவீந்திர ஜடேஜா போட்ட ஒரு டுவீட்டுக்கு ஓவரா சீன் போட்ட ரசிகர்கள்!

இந்த வெற்றியின் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியை காண பிசிசிஐ அழைக்காதது குறித்து சட்டீஸ்கர் ஆளுநர் அனுசுயா உய்கே கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், அந்தப் போட்டியைக் காண்பதற்கு மாநில முதல்வர் பூபேஷ் பாகெல், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, நீதிபதிகள் மற்றும் சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கும் போட்டிக் காண்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!

இது குறித்து ராஜ்பவன் செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியை காண்பதற்கு மாநில ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், பிசிசிஐயை மாநில ஆளுநர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கான எங்களது ஆட்சேபனையை இந்திய அரசு மற்றும் பிசிசிஐயிடம் விரைவில் பதிவு செய்வோம். உண்மையில் ராஜ்பவனை அழைப்பாளர்களுக்கான பட்டியலில் சேர்க்காததற்கு மாநில அரசு எந்த வகையிலும் பொறுப்பல்ல. கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றின் நெறிமுறைகளின்படிதான் இந்த விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆதலால், மாநில ஆளுநரை அழைப்பற்கான முயற்சியை பிசிசிஐ தான் எடுத்திருக்க வேண்டும்.

பிரமாண்டமாக நடக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்! நேரம் எப்போது தெரியுமா?

மாநில அரசு ராய்பூர் மைதானத்தை அமைப்பாளர்களுக்கும், பாதுகாப்பிற்கும் மட்டுமே வழங்கியது என்று ராஜ்பவன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!

இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!