பும்ராவுக்கு மாற்று வீரராக ஷமி - சிராஜ் இருவரில் யாரை எடுக்கலாம்..? கவாஸ்கர் கருத்து

By karthikeyan VFirst Published Oct 12, 2022, 4:59 PM IST
Highlights

டி20 உலக கோப்பையிலிருந்து காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா விலகியதால் அவருக்கு மாற்று வீரராக ஷமி - சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்ற நிலையில், அவர்களில் யாரை எடுக்கலாம் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சி போட்டிகளில் ஆடி தீவிரமாக தயாராகிவருகின்றன. டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகிறது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - T20 WC: உலகின் சிறந்த காரை யூஸ் பண்ணாம கேரேஜில் நிற்க வைப்பதில் என்ன பயன்? இந்திய அணி மீது பிரெட் லீ விமர்சனம்

டி20 உலக கோப்பையிலிருந்து காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா விலகிவிட்டார். அவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஸ்டாண்ட்பை வீரராக அணியில் எடுக்கப்பட்டுள்ள சீனியர் பவுலர் முகமது ஷமி தான் பும்ராவுக்கு மாற்று வீரராக எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷமியை முன்பே, இந்திய மெயின் அணியில் எடுக்காமல் ரிசர்வ் வீரராக எடுத்ததே கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இப்போது ஷமி - சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் பும்ராவிற்கு மாற்று வீரராக எடுக்கப்பட வாய்ப்புள்ளது. டி20 உலக கோப்பைக்கான ரிசர்வ் வீரராக ஏற்கனவே அணியில் இருந்த வீரர் என்பதன் அடிப்படையில் ஷமி தான் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முகமது சிராஜ் அண்மையில் ஆடிய தென்னாப்பிரிக்க தொடரில் அருமையாக பந்துவீசினார்.  அவர் உயரமான பவுலர் என்பதால், பவுன்ஸுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதால் அவரும் இந்த போட்டியில் உள்ளார். 

ஷமி கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கு பின் ஒரு டி20 போட்டியில் கூட ஆடவில்லை. ஆனால் சிராஜ் கடைசியாக தென்னாப்பிரிக்க தொடரில் ஆடி அபாரமாக பந்தும் வீசியிருக்கிறார். எனவே ஷமியை சிராஜ் முந்துகிறார். ஆனாலும் இருவரில் யார் மாற்று வீரர் என்று நாளை தெரிந்துவிடும்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், சிராஜ் நன்றாக பந்துவீசியிருக்கிறார். எனவே நான் அவரைத்தான் எடுப்பேன். ஷமி ஓராண்டாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடவேயில்லை. இன்னும் 15வது வீரர்(பும்ராவுக்கு மாற்றுவீரர்) எடுக்கப்படவில்லை. ஷமி நல்ல பவுலர் தான். ஆனால் அவர் அண்மையில் கிரிக்கெட் ஆடவில்லை. 2 பயிற்சி போட்டிகள் இருக்கின்றன. இருந்தாலும், அண்மையில் ஆடிராத ஷமியை எடுப்பது சரியாக இருக்காது. 

இதையும் படிங்க - பிசிசிஐ தலைவர் பதவி விவகாரம்..! கங்குலியை வைத்து அரசியல் செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக

ஷமி தரமான பவுலர். ஆனால் கொரோனாவிலிருந்து மீண்டுவந்த அவர் உடனடியாக ஆடுவது அவ்வளவு எளிதல்ல. அவரது ஸ்டாமினா குறைந்திருக்கும். டி20 கிரிக்கெட்டில் பவுலர் 4 ஓவர் தான் வீசப்போகிறார். அதனால் பரவாயில்லை என்று யோசித்தாலும் கூட, சிராஜ் அருமையாக பந்துவீசியிருக்கிறார். எனவே அவரை எடுக்கலாம் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!