பாலிவுட் சினிமாவில் ஷிகர் தவான் அறிமுகம்..! ஃபர்ஸ்ட் லுக் ஃபோட்டோ செம வைரல்

Published : Oct 12, 2022, 03:05 PM IST
பாலிவுட் சினிமாவில் ஷிகர் தவான் அறிமுகம்..! ஃபர்ஸ்ட் லுக் ஃபோட்டோ செம வைரல்

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஷிகர் தவான்.  ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக 34 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2013-2019 வரை இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான அங்கமாக திகழ்ந்தார் ஷிகர் தவான்.

டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனக்கான நிரந்தரமான இடத்தை இழந்த ஷிகர் தவான், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவருகிறார். அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து செயல்பட்டு, அந்த தொடரை 2-1 என வென்று கொடுத்தார்.

இதையும் படிங்க - பிசிசிஐ தலைவர் பதவி விவகாரம்..! கங்குலியை வைத்து அரசியல் செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக

கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திவந்த ஷிகர் தவான், அடுத்ததாக சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகிய கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து ஷிகர் தவானும் சினிமாவில் நடிக்கிறார். ஹர்பஜன் சிங் ஃப்ரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்திலும், இர்ஃபான் பதான் கோப்ரா திரைப்படத்திலும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ஷிகர் தவான் பாலிவுட்டில் "Double XL" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஷிகர் தவான் நடித்துள்ளார். தமிழில் காலா மற்றும் வலிமை ஆகிய படங்களில் நடித்த நடிகை ஹூமா குரேஷியுடன் ஷிகர் தவான் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் செம வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க - T20 World Cup: காயத்தால் விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ப்ரிட்டோரியஸுக்கு மாற்று வீரர் அறிவிப்பு

உடல் பருமனான 2 பெண்களின் விளையாட்டு வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை சத்திரம் ரமணி இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 4ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!