T20 WC: உலகின் சிறந்த காரை யூஸ் பண்ணாம கேரேஜில் நிற்க வைப்பதில் என்ன பயன்? இந்திய அணி மீது பிரெட் லீ விமர்சனம்

By karthikeyan V  |  First Published Oct 12, 2022, 4:10 PM IST

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில், 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கை எடுக்காததை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் பிரெட் லீ.
 


டி20 உலக கோப்பை வரும் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சி போட்டிகளில் ஆடி தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - பாலிவுட் சினிமாவில் ஷிகர் தவான் அறிமுகம்..! ஃபர்ஸ்ட் லுக் ஃபோட்டோ செம வைரல்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வு விமர்சனத்துக்குள்ளானது. ஷமி, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்காதது விமர்சனத்துக்குள்ளானது. பும்ரா காயத்தால் விலகியதால் ஷமி - சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் அவருக்கு மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் தான் இந்த டி20 உலக கோப்பையில் ஒரேயொரு பிரச்னையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், 150 கிமீ வேகத்தில் எளிதாக வீசக்கூடிய உம்ரான் மாலிக்கை டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரெட் லீ.

இதுகுறித்து பேசியுள்ள பிரெட் லீ, உம்ரான் மாலிக் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர். சிறந்த காரை கேரேஜில் நிற்க வைப்பதில் என்ன பயன்? உம்ரான் மாலிக் கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

இதையும் படிங்க- பிசிசிஐ தலைவர் பதவி விவகாரம்..! கங்குலியை வைத்து அரசியல் செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக

அவர் சின்ன பையன் தான். ஆனால் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர். ஆஸ்திரேலியாவில் ஆடும்போது 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பவுலரை பெற்றிருப்பது பெரும் பலம் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
 

click me!