BAN vs IND: கேஎல் ராகுல் கோட்டைவிட்ட கேட்ச் மட்டுமே தோல்விக்கு காரணம் கிடையாது.. இதுவும் தான்! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 5, 2022, 6:02 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு கேஎல் ராகுல் கோட்டைவிட்ட கேட்ச் மட்டுமே காரணம் அல்ல என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி தாக்காவில் நடந்தது. அந்த போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் (7) மற்றும் ரோஹித் சர்மா (27) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் (24), வாஷிங்டன் சுந்தர்(19), ஷபாஸ் அகமது(0), ஷர்துல் தாகூர்(2), தீபக் சாஹர்(0) ஆகியோரும் சொதப்பினர். கேஎல் ராகுல் மட்டுமே நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். ராகுல் 73 ரன்கள் அடித்ததால் தான் இந்திய அணி 186 ரன்களாவது அடித்தது. 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 

PAK vs ENG: முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

187 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி, 136 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு மெஹிடி ஹசனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மெஹிடி ஹசன் அபாரமாக பேட்டிங் ஆடி 38 ரன்களை விளாசி வங்கதேச அணியை வெற்றி பெற செய்தார். கடைசி விக்கெட்டுக்கு மெஹிடி ஹசனும்  முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் இணைந்து 51 ரன்கள் அடித்து வங்கதேசத்தை வெற்றி பெற செய்தனர். வங்கதேச அணி கடைசி விக்கெட்டுக்கு அடித்த 2வது அதிகபட்ச ஸ்கோர் இது.

வங்கதேசத்தை ஜெயிக்க வைத்த மெஹிடி ஹசன், இன்னிங்ஸின் 43வது ஓவரில் ஷர்துல் தாகூரின் பவுலிங்கில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச் வாய்ப்பை ராகுல் தவறவிட்டார். அதை பிடித்திருந்தால் வங்கதேச அணி ஆல் அவுட்டாகியிருக்கும். இந்திய அணி ஜெயித்திருக்கும். எனவே ராகுல் தவறவிட்ட கேட்ச்சை அல்ல; மேட்ச்சை.. அவர் கேட்ச்சை கோட்டைவிட்டதால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என்று விமர்சனங்கள் வலுத்தன.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், ராகுல் கோட்டைவிட்ட கேட்ச்சும் தோல்விக்கு காரணம். ஆனால் அதுமட்டுமே தோல்விக்கு காரணமல்ல. இந்திய அணி  80 ரன்கள் குறைவாக அடித்தது. 250 ரன்கள் அடித்திருந்தால் ஜெயித்திருக்கலாம். ஓவருக்கு 4 ரன்கள் அடித்தால் போதும் என்ற இலக்கு நிர்ணயித்தால் அது இலக்கை விரட்டும் அணி மீது எந்த அழுத்தத்தையும் போடாது. அதையும் மீறி, எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி அதன் மீது அதுவே அழுத்தத்தை போட்டுக்கொண்டது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

click me!