ஹர்திக் பாண்டியாவை விட இந்திய அணியின் கேப்டன்சிக்கு தகுதியான வீரர் அவர் தான்..! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 5, 2022, 4:16 PM IST
Highlights

இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கான அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் கேப்டனாக கோலிக்கு பின் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி, ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என 2 மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் தோல்வியை தழுவி ஏமாற்றமளித்தது.

இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகள், புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைப்பது குறித்து பேசப்பட்டுவருகிறது. 

BAN vs IND: இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி

இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் இருந்த கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரை ஓரங்கட்டி அந்த ரேஸில் முதலிடம் பிடித்தார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்து தனது கேப்டன்சி திறனை நிரூபித்த ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீது அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐக்கும் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

அண்மையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கூட ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் ஆகியோரின் அடுத்த கேப்டனுக்கான ஆப்சனாகவும் பாண்டியா தான் உள்ளார். ஆனால் முன்னாள் வீரர் மனிந்தர் சிங், ஷ்ரேயாஸ் ஐயரைஅடுத்த கேப்டனாக நியமிக்கலாம் என்று கருத்து கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு வரமாட்டோம்னு அடம்பிடித்த பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா! வெளுத்துவாங்கிய முன்னாள்வீரர்

இதுகுறித்து பேசிய மனிந்தர் சிங், நான் 3-4 ஆண்டுகளாக சொல்லிவருகிறேன், ஷ்ரேயாஸ் ஐயர் தான் எனது ஃபேவரைட். ஐபிஎல்லிலும் சரி, மற்ற அணிகளையும் சரி, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியை நான் உற்று கவனித்திருக்கிறேன். அவர் கிரிக்கெட்டின் நல்ல சிந்தனையாளர். நேர்மறையான வீரர். அவரது பேட்டிங் அணுகுமுறையை பார்த்திருப்பீர்கள். எப்போது பேட்டிங் ஆட வந்தாலும், ரன் அடிப்பதில் மட்டுமே குறியாக இருப்பார். பவுண்டரி அடிக்க முடியவில்லை என்றாலும், முடிந்தவரை களத்தில் நீடித்து சிங்கிள் ரொடேட் செய்து ஸ்கோர் செய்யக்கூடிய வீரர்  ஷ்ரேயாஸ் ஐயர். ஹர்திக் பாண்டியா கேப்டனுக்கான ஆப்சனில் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் என்னை பொறுத்தமட்டில் ஷ்ரேயாஸ் ஐயரை வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக நியமிக்கலாம். நான் 3-4 ஆண்டுகளாகவே இதை கூறிவருகிறேன் என்றார் மனிந்தர் சிங்.
 

click me!