கேப்டன் கூல் தோனி இல்லை, அது வேறு ஒருவர் – சுனில் கவாஸ்கர்!

By Rsiva kumar  |  First Published Jun 26, 2023, 4:06 PM IST

தோனி கூல் கேப்டன் இல்லை அதற்கு சொந்தமானவர் வேறொருவர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி எப்போதும் மைதானத்தில் அமைதியாக இருந்து வீரர்களை வழிநடத்துவதால், அவர் கூல் கேப்டன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். இதுவரையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்.

1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!

Tap to resize

Latest Videos

ஆனால், உண்மையில் கேப்டன் கூல் தோனி இல்லை. அது வேறொருவர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கடந்த 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை முதல் முறையாக சாம்பியனானது. பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் கபில் தேவ்.

ஐபிஎல் விளையாடினால் போதுமா? தேர்வுக் குழுவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!

எந்த நிலையிலும் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் மிகவும் அமைதியாக இருந்து இந்திய அணியை வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ்க்கு மதன் லால் ஓவரில் கபில் தேவ் பிடித்த கேட்சை யாராலும் மறக்க முடியாது. அதுமட்டுமின்றி வீரர்கள் மிஸ் பீல்டு செய்யும் போதும் சரி, கேட்சை விடும் போது சரி, கோபமே படமாட்டார். சிரித்துக் கொண்டே அந்த தருணத்தை கடந்து சென்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக செய்வார்.

விபத்தில் இறந்த எம்எஸ் தோனியின் முன்னாள் காதலி பிரியங்கா ஜா யார் தெரியுமா?

இதனால், கபில் தேவ் தான் ஒரிஜினல் கேப்டன் கூல். முதல் முறையாக இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றிய போது இந்திய வீரர்கள் எல்லோருமே சிரித்து கொண்டிருந்தார்கள். இதனால், அப்போதே டூத்பேஸ்ட் விளம்பரத்தை உருவாக்கியிருக்கலாம் என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

click me!