இந்திய அணியில் அறிமுகமாவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தனது முன்னாள் காதலியான பிரியங்கா ஜாவை ஒரு விபத்தில் இழந்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் மகேந்திர சிங் தோனி. விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் நிலைநிறுத்திக் கொண்ட தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும் எடுத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமானவர் தோனி.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? அப்போ புரியல, இப்போ புரியுது – விரேந்திர சேவாக்!
பாலிவுட் நடிகை திஷா பதானி ஒரு பாத்திரத்தில், தோனியின் முதல் காதலியான பிரியங்கா ஜாவைப் பற்றி அறிய வைத்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தோனி முயன்றபோது அவர்களது உறவு தொடங்கியது. தோனி தனது வாழ்நாள் முழுவதையும் பிரியங்கா ஜாவுடன் கழிக்க விரும்பினார், ஆனால் அதற்குள்ளாக 2003-04 இல் ஜிம்பாப்வே மற்றும் கென்யா சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ஏ அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகும் ஐபிஎல் ஸ்டார் ரிங்கு சிங்?
இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்த தோனி முத்தரப்பு தொடரில், பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக 2 சதங்கள் உள்பட 362 ரன்கள் எடுத்தார். ஆனால், தோனி, இந்திய அணியில் இடம் பெறுவதற்கு முன்னதாகவே அவரது காதலியான பிரியங்கா ஜா சாலை விபத்தில் உயிரிழந்தார்.
ஆம், அப்போது தோனி வெளிநாட்டில் இருந்தார். இச்சம்பவம் கூட, தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ்.தோனி – அண்டோல்டு ஸ்டோரி என்ற படத்தில் இடம் பெற்றிருந்தது. இதில், தோனியாக மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் பிரியங்கா ஜாவின் குடும்பம் மற்றும் தொழில் பற்றி குறிப்பிடவில்லை.
சொந்த மண்ணில் விக்கெட் எடுத்த நடராஜன்; முதல் முறையாக நேரில் பார்த்து ரசித்த நட்டு ஃபேமிலி!
தோனி தனது முதல் காதலியான பிரியங்கா ஜாவின் இழப்பில் இருந்து மீள நிறைய நேரம் எடுத்ததாக நம்பப்படுகிறது. தோனி மைதானத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவிட்டார், மேலும் நீண்ட காலத்திற்குப் பிறகு தான் இந்திய அணியில் அறிமுகமானார். தோனியின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் இந்தப் படம் வரும் ஜூலை 7ஆம் தேதி அவரது 42ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் இந்தியாவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.