வார்ன் பெஸ்ட் ஸ்பின்னர் இல்லனு நான் சொன்னது என் நேர்மையான கருத்து; சொன்ன நேரம் தான் தவறானது! கவாஸ்கர் விளக்கம்

Published : Mar 08, 2022, 05:00 PM IST
வார்ன் பெஸ்ட் ஸ்பின்னர் இல்லனு நான் சொன்னது என் நேர்மையான கருத்து; சொன்ன நேரம் தான் தவறானது! கவாஸ்கர் விளக்கம்

சுருக்கம்

ஷேன் வார்ன் பெஸ்ட் ஸ்பின்னர் இல்லை என்று, தான் கூறியது தன்னுடைய நேர்மையான கருத்துதான் என்றாலும், அதை கூறிய நேரம் தவறானது என்று கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.  

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் பவுலர் என்ற சாதனைக்குரியவர். ஆனால் அவர் இடைப்பட்ட காலத்தில் தடையில் இருந்ததால், அவரது கெரியரை 708 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் முடித்தார். இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ரிஸ்ட் ஸ்பின்னரான ஷேன் வார்ன், விக்கெட்டின் எண்ணிக்கையில் முரளிதரனுக்கு அடுத்த இரண்டாமிடத்தில் இருந்தாலும், முரளிதரனுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ஷேன் வார்ன். அவரது கெரியரில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், ஜெயசூரியா, ஜாக் காலிஸ் உள்ளிட்ட பல தலைசிறந்த வீரர்களை தெறிக்கவிட்டவர் ஷேன் வார்ன்.

இந்நிலையில், ஷேன் வார்ன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, அவருக்கு புகழாரம் சூட்டி பல முன்னாள், இந்நாள் வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது திறமையையும், அவருடனான நினைவுகளையும் நினைவுகூர்ந்து வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க - கடைசிவரை ஷேன் வார்னிடம் நான் இதை சொல்லலயே.. இப்ப சொல்லணும்னு நெனக்கிறேன்; அவர் இல்லையே! கலங்கிய பாண்டிங்

ஷேன் வார்ன் பற்றி கவாஸ்கர்;

அப்போது, ஷேன் வார்ன் இறப்பு குறித்து கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தபோது, கவாஸ்கரிடம் ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், ஷேன் வார்ன் தான் ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னரா என்று ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கவாஸ்கர், இல்லை என்று பதிலளித்ததுடன், முத்தையா முரளிதரன் தான் பெஸ்ட் ஸ்பின்னர் என தெரிவித்தார்.

கவாஸ்கரின் ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கின. ஷேன் வார்ன் பற்றிய கவாஸ்கரின் கருத்து கூறப்பட்ட நேரம் தவறானது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ரசிகர்களும் பதிவிட்டனர். இதையடுத்து கவாஸ்கர் வசைகளுக்கு ஆளானார்.

இதையும் படிங்க - India vs Sri Lanka: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம்

கவாஸ்கர் விளக்கம்:

இந்நிலையில், தனது கருத்து குறித்து தெளிவுபடுத்தியுள்ள சுனில் கவாஸ்கர், ஷேன் வார்ன் மிகச்சிறந்த ஸ்பின்னர் தான். ஆனால் அவர் இந்தியாவில் பெரிதாக சோபித்ததில்லை. நாக்பூர் டெஸ்ட் ஒன்றில் மட்டும்தான் அவர் வார்ன் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஸ்பின் பவுலிங்கை திறம்பட  எதிர்கொள்ளும் இந்திய வீரர்களுக்கு எதிராக ஷேன் வார்ன் வெற்றிகரமாக திகழவில்லை ஆனால் முத்தையா முரளிதரன் இந்திய வீரர்களுக்கு எதிராக வெற்றிகரமான ஸ்பின்னராக இருந்திருக்கிறார். அதனால் என்னை பொறுத்தமட்டில் முரளிதரன் தான் சிறந்த ஸ்பின்னர். எனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் என்னிடம் ஷேன் வார்ன் தான் சிறந்த ஸ்பின்னரா என்று கேட்டதற்கு, எனது நேர்மையான பதிலைத்தான் நான் கூறினேன். அந்த தொகுப்பாளர் கேட்டதால் தான் நான் கூறினேன். அவர் கேட்டதற்கு நான் பதில் கூறாமல் இருந்திருக்கலாம். அவர் கேட்டிருக்கக்கூடாது; அல்லது நானாவது அந்த பதில் கூறாமல் இருந்திருக்க வேண்டும். வார்ன் தலைசிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்றார் ஷேன் வார்ன்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!