Shane Warne: ஷேன் வார்ன் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம்..!

Published : Mar 08, 2022, 03:49 PM IST
Shane Warne: ஷேன் வார்ன் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம்..!

சுருக்கம்

ஷேன் வார்ன் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

ஷேன் வார்ன் மரணம்:

ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் தாய்லாந்துக்கு இன்பச்சுற்றுலா சென்ற நிலையில், அங்கு அவரது சொந்த வில்லாவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 52 வயதான ஷேன் வார்னின் மரணம், கிரிக்கெட் உலகையே சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

இயற்கை மரணம்:

ஷேன் வார்ன் திடீரென உயிரிழந்ததால் அவரது இறப்பு குறித்த சந்தேகம் எழுந்தது. அவரது அறையை பரிசோதித்த போலீஸார், அவரது அறையில் சில இடங்கள் மற்றும் துண்டு, தலையணை ஆகியவற்றில் இரத்தக்கறை இருந்ததாக தெரிவித்திருந்தனர்.  அவருக்கு ஆஸ்துமா மற்றும் இரத்தப்போக்கு ஆகிய பிரச்னைகள் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் அவரது இறப்பு இயற்கையானதுதான் என போலீஸார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க - IPL 2022: விராட் கோலி அவ்வளவுதான்.. இனிமேல் சான்ஸே இல்ல..! முன்னாள் ஆர்சிபி கேப்டன் அதிரடி

ஷேன் வார்ன் அவரது அறையில் உணர்வில்லாமல் கிடந்ததை கண்டு அவரது நண்பர்கள் தான் முதலுதவி செய்துள்ளனர். ஆனால் அவர்களது 20 நிமிட முதலுதவி சிகிச்சை பலனளிக்கவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஷேன் வார்ன் உயிரிழந்தார் என்று தெரிவித்திருந்தனர். ஷேன் வார்னின் பிரேத பரிசோதனையும் அவர் இயற்கையாகத்தான் இறந்தார் என்பதை உறுதி செய்தது.

ஷேன் வார்னின் உயிரிழப்பு கிரிக்கெட் உலகை சோகத்தில் மூழ்கடித்த நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும், ஷேன் வார்னுடனான நினைவுகளை பகிர்ந்து, அவரது திறமையை வியந்து புகழ்ந்து, அவருக்கு இரங்கல் தெரிவித்து கலங்கினர்.

இதையும் படிங்க - என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த ஆஃப் ஸ்பின் ஸ்பெல் அதுதான்!ஆஸி.,க்கு எதிரான அஷ்வின் ஸ்பெல்லை புகழ்ந்த கம்பீர்

ஷேன் வார்ன் கடைசி புகைப்படம்:

இந்நிலையில், ஷேன் வார்னின் கடைசி புகைப்படம் சமூக வலைதளத்தில் அவரது நண்பரால் பகிரப்பட்டுள்ளது. ஷேன் வார்ன் அவரது நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சென்ற நிலையில், அங்கு ஷேன் வார்ன் சிரித்தபடி எடுக்கப்பட்ட  கடைசி புகைப்படத்தை வார்னின் நெருங்கிய நண்பர் தாமஸ் ஹால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருவதுடன், அதைக்கண்ட ரசிகர்கள் கலங்குகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!