West Indies vs England: முதல் டெஸ்ட்டில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Mar 08, 2022, 02:41 PM IST
West Indies vs England: முதல் டெஸ்ட்டில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் படுமட்டமாக விளையாடி 4-0 என தோற்ற இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளது.

இங்கிலாந்து அணி இந்த தொடரில் சிறப்பாக ஆடி தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆண்டிகுவாவில் இன்று (8ம் தேதி) தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

 இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஃபாஸ்ட் பவுலர் ஆலி ராபின்சனும் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்கள் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும் இல்லை.

இதையும் படிங்க - கடைசிவரை ஷேன் வார்னிடம் நான் இதை சொல்லலயே.. இப்ப சொல்லணும்னு நெனக்கிறேன்; அவர் இல்லையே! கலங்கிய பாண்டிங்

உத்தேச இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட் (கேப்டன்), டேனியல் லாரன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், க்ரைக் ஓவர்டன், மார்க் உட், ஜாக் லீச்.

இதையும் படிங்க - ஜடேஜா பெருந்தன்மையான மனசுக்காரர்.. அவரோட பவுலிங் கோட்டாவை விட்டுக்கொடுத்தார்..! அஷ்வின் புகழாரம்

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

க்ரைக் பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்ப்பெல், க்ருமா பானர், ஜெர்மைன் பிளாக்வுட், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா டி சில்வா (விக்கெட் கீப்பர்), கீமார் ரோச், அல்ஸாரி ஜோசஃப், ஜெய்டன் சீல்ஸ், வீராசாமி பெர்மால்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!