இன்னும் ஒரு வருஷத்துக்கு நீங்கதான்..! இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக பைஜூஸின் ஒப்பந்தத்தை நீட்டித்த பிசிசிஐ

Published : Mar 07, 2022, 09:56 PM IST
இன்னும் ஒரு வருஷத்துக்கு நீங்கதான்..! இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக பைஜூஸின் ஒப்பந்தத்தை நீட்டித்த பிசிசிஐ

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்ஸர்ஷிப்பை பைஜூஸ் நிறுவனத்துக்கு மேலும் ஓராண்டை நீட்டித்துள்ளது பிசிசிஐ.   

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸர்:

இந்திய அணியின் ஜெர்சிக்கு நீண்டகால ஸ்பான்ஸராக இருந்தது சஹாரா. அதன்பின்னர் 2017 மார்ச் வரை ஸ்டார் நிறுவனம் ஸ்பான்ஸராக இருந்தது. 2017 மார்ச்சில் ஸ்டாரிடமிருந்து சீன மொபைல் நிறுவனமான ஓப்போ ஜெர்சி ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியிருந்தது.

இதையும் படிங்க - கடைசிவரை ஷேன் வார்னிடம் நான் இதை சொல்லலயே.. இப்ப சொல்லணும்னு நெனக்கிறேன்; அவர் இல்லையே! கலங்கிய பாண்டிங்

ஜெர்சி ஸ்பான்ஸர் பைஜூஸ்:

2019 செப்டம்பரில் இருந்து பைஜூஸ் கற்றல் செயலி நிறுவனம் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியது. 2022ம் ஆண்டு(நடப்பாண்டு) மார்ச் வரை பைஜூஸ் நிறுவனத்திற்கு ஸ்பான்ஸர்ஷிப் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க - IPL 2022: விராட் கோலி அவ்வளவுதான்.. இனிமேல் சான்ஸே இல்ல..! முன்னாள் ஆர்சிபி கேப்டன் அதிரடி

பைஜூஸ் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தம் நீட்டிப்பு:

பைஜூஸின் ஸ்பான்ஸர்ஷிப் காலம் முடியவுள்ள நிலையில், மேலும் ஓராண்டுக்கு, அதாவது 2023ம் ஆண்டு மார்ச் வரை பைஜூஸையே ஜெர்சி ஸ்பான்ஸராக நீட்டித்துள்ளது பிசிசிஐ.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!