ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

By Rsiva kumar  |  First Published Jul 26, 2023, 3:32 PM IST

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.


இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற் கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச மகளிர் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!

Tap to resize

Latest Videos

2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இறுதியாக தொடரை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி 22ஆம் தேதி நடந்தது. இதில், வங்கதேச மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது.

ஹோம் சீசனில் புறக்கணிக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்!

பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஸ்டிகா பதியா 5 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2024 மார்ச் வரையில் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய அணி: ஹோம் சீரிஸ் அட்டவணை வெளியீடு!

அடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களமிறங்கினார். அவர், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். 14 ரன்கள் எடுத்திருந்த போது நஹீதா அக்தர் வீசிய பந்தை ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். ஆனால், பந்து அவரது பேடில் பட்டு அதன் பிறகு அவரது கையில் பட்டு சென்றுள்ளது. லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த பீல்டர் பந்தை கேட்ச் பிடித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக பவுலர் நடுவரிடம் எல்பிடபிள்யூவிற்கு அப்பீல் செய்யவே நடுவரும் சற்றும் யோசிக்காமல் அவுட் கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா – 61 தங்கம் வென்று சென்னை மாவட்ட அணி முதலிடம்: டிராபி வழங்கிய முதல்வர்!

இதனால், ஆத்திரமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டெம்பை உடைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் போட்டியில் இறுதியாக இந்திய மகளிர் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. கூடுதலாக ஒரு ரன் எடுத்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். எனினும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்று சமன் செய்துள்ளன.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், இது போன்ற நடுவர்களால் நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். அடுத்த முறை நாங்கள் வங்கதேசத்திற்கு வரும் போது இது போன்ற நடுவர்களை சமாளிப்பதை உறுதி செய்து அதற்கேற்ப எங்களை தயார்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.

நவராத்திரி விழா: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றப்படுமா?

எனினும், போட்டி விதிமுறையை மீறியதற்காக ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போட்டி சம்பளத்திலிருந்து 75 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மைதானத்தில் நடந்த சம்பவத்திற்காக 50 சதவிகிதமும், போட்டி முடிந்த பிறகு நடுவர் குறித்து பேசியதற்காகவும் 25 சதவிகிதமும் என்று மொத்தமாக 75 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி 4 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட உள்ளது. அவர் களத்தில் நடந்த சம்பவத்திற்காக 3 டீமெரிட் புள்ளிகளையும், பரிசளிப்பு விழாவில் நடுவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்காக 1 டிமெரிட் புள்ளியையும் பெற உள்ளார்.

ஐசிசி விதிமுறைகளின்படி, 4 டிமெரிட் புள்ளிகள் 2 இடைநீக்கப் புள்ளிகளாகக் கணக்கிடப்படுகின்றன. 2 சஸ்பென்ஷன் புள்ளிகள் ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு T20 அல்லது ஒரு நாள் போட்டிகளுக்குச் சமம். இதனால் இந்தியாவின் அடுத்த இரண்டு ஆட்டங்களில் ஹர்மன்ப்ரீத் விளையாடமாட்டார்.

உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த சிராக் ஷெட்டி - சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி!

இருப்பினும், மகளிர் அணி அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹாங்சோவுக்குச் செல்கிறது. எனவே ஹர்மன்ப்ரீத் கவுர் 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் அவர் 2 போட்டிகளில் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக ஸ்மிருதி மந்தனா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!