இந்திய அணி விளையாடும் ஹோம் சீசனுக்கான போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. அதன் பிறகு ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு மார் மாதம் வரையில் இந்திய அணி ஹோம் சீரிஸில் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது.
2024 மார்ச் வரையில் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய அணி: ஹோம் சீரிஸ் அட்டவணை வெளியீடு!
இதில், 5 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 8 டி20 போட்டிகள் என்று 16 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. அதில், செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிச்மபர் 3 ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது.
அதன் பிறகு ஆப்கானிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் நடக்கிறது. இறுதியாக இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி விழா: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றப்படுமா?
இந்த 2023 – 2024 ஆண்டுக்கான ஹோம் சீரிஸில் இந்திய அணி மொத்தமாக 16 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. இந்த 16 போட்டிகளும் மொஹாலி, இந்தூர், ராஜ்கோட், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கவுகாத்தி, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூரு, ராஞ்சி, தரம்சாலா உள்ளிட்ட மைதானங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹோம் சீசனில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, லக்னோ ஆகிய மைதானங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர்களில் சென்னை, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய 10 மைதானங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த 10 மைதானங்களில் தான் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. உலகக்கோப்பைத் தொடரின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 5 போட்டிகள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.