இந்திய அணி ஹோம் சீரிஸில் விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில், இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. இதையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிகிறது.
நவராத்திரி விழா: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றப்படுமா?
இதையடுத்து இந்திய அணி அயர்லாந்துக்கு செல்கிறது. அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 18 முதல் 23 ஆம் தேதி வரையில் நடக்கிறது. அதன் பிறகு ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. ஆசிய கோப்பை தொடரைத் தொடர்ந்து உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்த உலகக் கோப்பை தொடர் நடக்கிறது.
உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணிக்கான ஹோம் சீரிஸ்க்கான தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. இதற்கான ஆலோசனைக் குழு நேற்று நடந்தது. அதன்படி 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான ஹோம் சீசனுக்கான அட்டவணை வெளியானது. இந்திய அணி 5 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 8 டி20 போட்டிகள் என்று மொத்தமாக 16 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது.
ஐபிஎல் மினி ஏல தொகையில் மாற்றம் கொண்டு வரும் பிசிசிஐ: கொண்டாட்டத்தில் சிஎஸ்கே!
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவுடன் இந்தியா நடத்துவதால் ஹோம் சீசன் தொடங்கும். ஒருநாள் தொடர் மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பையைத் தொடர்ந்து, இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் விளையாடுகிறது, நவம்பர் 23 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி ஹைதராபாத்தில் முடிவடைகிறது.
வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் மொஹாலி, இந்தூர் மற்றும் பெங்களூருவில் நடக்கிறது. இந்தியா வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரி விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலாவில் நடக்கிறது. இந்த ஹோம் தொடர் வரும் மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.