இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் வெயில் தாங்க முடியாமல் மைதானத்திலேயே சேரில் ரெஸ்ட் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். மேலும், ஆஸ்திரேலியா அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேத்யூ ஷார்ட், ஜோஸ் இங்கிலிஸ், சீன் அபாட், ஆடம் ஜம்பா, ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் நீக்கப்பட்டு, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
பாய்மர படகுப் போட்டியில் வெண்கலம்; தமிழக வீரர் விஷ்ணு சரவணனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
இதே போன்று இந்திய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷான், சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெறவில்லை. மேலும், ரோகித் சர்மா, விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றனர்.
இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்கம் முதலே டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஒரு கட்டத்தில் டேவிட் வார்னர் தொடர்ந்து 3ஆவது ஒருநாள் போட்டியிலும் அரைசதம் விளாசினார். அவர் 32 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா வீரர்கள் 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் வார்னர் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆரோன் பின்ச் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்தார். தற்போது வார்னர் அவே போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்தப் போட்டியில் வார்னர் 56 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இதையடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 28 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு வெயிலின் தாக்கம் காரணமாக மைதானத்திற்கு நீண்ட நேரம் நிற்க முடியாத நிலையில், சேர் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு புறம் சரமாரியாக சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசிய மார்ஷ் 84 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் பிரஷித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 61 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 74 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது வரையில் ஆஸ்திரேலியா 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
A chair has arrived for Smith.
It's so hot in Rajkot, tough for players. pic.twitter.com/9IEiokp2I1