Asian Games Mens T20: 16 ஆண்டுகளுக்குப் பிறகு 6 சிக்ஸர்கள், யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த தீபேந்திர சிங்!

By Rsiva kumar  |  First Published Sep 27, 2023, 2:11 PM IST

ஆசிய விளையாட்டு போட்டியில் மங்கோலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் நேபாள் வீரரான தீபேந்திர சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.


சீனாவில் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதில், துப்பாக்கி சுடுதல், படகுப்போட்டி, நீச்சல், குதிரையேற்றம், தடகள போட்டி, ஹாக்கி, கால்பந்து, வாலிபால், பேட்மிண்டன், சைக்கிளிங், பாக்‌ஷிங், கிரிக்கெட் என்று ஏராளமான போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

IND vs AUS 3rd ODI Live Match: இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க அதிரடி மாற்றத்தோடு களமிறங்கிய ஆஸ்திரேலியா!

Tap to resize

Latest Videos

இதுவரையில் நடந்த போட்டிகளில் அடிப்படையில் சீனா 62 தங்கம், 35 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 113 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கத்துடன் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தங்கம் வென்று நாடு திரும்பியுள்ளது.

இந்த நிலையில் தான் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போன்று இன்று தொடங்கியது. இதில், குரூப் ஏ பிரிவில் நேபாள், மங்கோலியா, மாலத்தீவு அணிகளும், குரூப் பி பிரிவில் கம்போடியா, ஹான்காங், ஜப்பான் ஆகிய அணிகளும் குரூப் சி பிரிவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்று விளையாடுகின்றன.

Asian Games, Sift Kaur Samra: பெண்களுக்கான 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் பெற்று கொடுத்த சாம்ரா!

இதில், இன்று நடந்த குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நேபாள் மற்றும் மங்கோலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் டாஸ் வென்ற மங்கோலியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி நேபாள் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, மூன்றாவதாக வந்த குசால் மல்லா 50 ரன்களில் 12 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 137 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.

கேப்டன் ரோகித் பவுடெல் 61 ரன்களில் ஆட்டமிழக்கவே கடைசியாக தீபேந்திர சிங் களமிறங்கினார். அவர், பிடித்தது மொத்தமே 10 பந்துகள் தான். இதில், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். அதோடு, 9 பந்துகளில் 50 ரன்களும் எடுத்துள்ளார். இதன் மூலமாக குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதோடு இந்திய அணியின முன்னாள் வீரரான யுவராஜ் சிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு டி20 போட்டியில் 6 சிஸர்கள், 9 பந்துகளில் 50 ரன்கள் வரலாற்று சாதனை படைத்த நேபாள் வீரர்!

ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 10 பந்துகளில் மொத்தமாக 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் யுவராஜ் சிங் களமிறங்கினார். அப்போது இங்கிலாந்து அணியின் ஃபிளிண்டாஃப் வம்புக்கு இழுத்தார். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் சிங், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் இந்திய அணியின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

CWC 2023: உலகக் கோப்பைக்கான அணிகளை உற்சாகமாக வரவேற்கும் இந்தியா #WelcometoIndia!

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங் படைத்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இந்த சாதனையை நேபாள் வீரர் தீபேந்திர சிங் இன்று முறியடித்துள்ளார். இறுதியாக, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, மங்கோலியா பேட்டிங் ஆடி வெறும் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Asian Games 2023, Shooting: பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்!

click me!