ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று தொடங்கிய ஆண்களுக்கான முதல் டி20 போட்டியில் நேபாள் வீரர் தீபேந்திர சிங் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
சீனாவில் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதில், துப்பாக்கி சுடுதல், படகுப்போட்டி, நீச்சல், குதிரையேற்றம், தடகள போட்டி, ஹாக்கி, கால்பந்து, வாலிபால், பேட்மிண்டன், சைக்கிளிங், பாக்ஷிங், கிரிக்கெட் என்று ஏராளமான போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
CWC 2023: உலகக் கோப்பைக்கான அணிகளை உற்சாகமாக வரவேற்கும் இந்தியா #WelcometoIndia!
இதுவரையில் நடந்த போட்டிகளில் அடிப்படையில் சீனா 62 தங்கம், 35 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 113 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கத்துடன் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தங்கம் வென்று நாடு திரும்பியுள்ளது.
Asian Games 2023, Shooting: பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்!
இந்த நிலையில் தான் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போன்று இன்று தொடங்கியது. இதில், குரூப் ஏ பிரிவில் நேபாள், மங்கோலியா, மாலத்தீவு அணிகளும், குரூப் பி பிரிவில் கம்போடியா, ஹான்காங், ஜப்பான் ஆகிய அணிகளும் குரூப் சி பிரிவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்று விளையாடுகின்றன.
இதில், இன்று நடந்த குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நேபாள் மற்றும் மங்கோலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் டாஸ் வென்ற மங்கோலியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி நேபாள் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, மூன்றாவதாக வந்த குசால் மல்லா 50 ரன்களில் 12 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 137 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.
கேப்டன் ரோகித் பவுடெல் 61 ரன்களில் ஆட்டமிழக்கவே கடைசியாக தீபேந்திர சிங் களமிறங்கினார். அவர், பிடித்தது மொத்தமே 10 பந்துகள் தான். இதில், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். அதோடு, 9 பந்துகளில் 50 ரன்களும் எடுத்துள்ளார். இதன் மூலமாக குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 10 பந்துகளில் மொத்தமாக 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து, மங்கோலியா பேட்டிங் ஆடி வெறும் 41 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
🇳🇵 Breaking News: Sandeep Lamichhane, the Nepali Cricketer, secures a sensational hat-trick in the ongoing match against Mongolia! 🧢🔥
pic.twitter.com/SvKgz6CaOq