
வங்கதேச அணிக்கு கேப்டனாக இருந்தவர் தமீம் இக்பால். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ஓய்வை அறிவித்த நிலையில், தான் அவருக்கு பிறகு ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். எனினும், தமீம் இக்பால் கண்டிப்பாக அணியில் இணைந்து விளையாட வேண்டும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா அவரை விளையாட ஒப்புக் கொள்ள வைத்தார்.
அதன் பிறகு போட்டிகளில் இடம் பெற்று விளையாடினாலும், காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இவ்வளவு ஏன், நியூசிலாந்திற்கு எதிரான 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவரால் 3ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது.
IND vs AUS, 3rd ODI: 3ஆவது ஒரு நாள் போட்டி, இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு உண்டு!
இந்த நிலையிலும், அவரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆட வைக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தியதாகவும், ஆனால், அவர் தன்னால் குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்று அவர் கூறியதாகவும் தகவல் வெளியானது. மேலும், இப்படி காயத்தோடு இருக்கும் ஒருவரோடு உலகக் கோப்பையில் விளையாட தன்னால் முடியாது என்று கேப்டன் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் அவர் இல்லாத 15 பேர் கொண்ட உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Cricket World Cup 2023: கபில் தேவ் கடத்தப்பட்டது எதற்காக? இதோ வெளியானது உண்மையான காரணம்!
வங்கதேச அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை 6 ரன்களில் வீழ்த்தியது. அந்த வகையில், வேகப்பந்து வீச்சாளர்களாக தஸ்கின் அஹமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிஜூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தன்ஷிம் ஹசன் ஷாகிப் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பக்க பலமாக சுழற் பந்து வீச்சாளர்களான கேப்டன் ஷாகிப் அல் ஹசன், நசும் அகமது ஆகியோர் உள்ளனர்.
2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக வங்கதேச அணி 2 வார்ம் அப் ICC Cricket ODI World Cup Warm Up Matches போட்டிகளில் விளையாட உள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டி வரும் 29 ஆம் தேதியும், அக்டோபர் 2 ஆம் தேதியும் கவுகாத்தியில் நடக்கிறது. இதையடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வங்கதேச அணியானது ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!
உலகக் கோப்பைக்கான வங்கதேச வீரர்கள் Bangladesh World Cup Squad:
ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (துணை கேப்டன்), லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் தமீம், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிடி ஹசன் மிராஸ், நசுன் அகமது, ஷாக் மஹெதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தஃபிஜூர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஷிம் ஹசன் ஷாகிப்.