ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகள் அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ, ஹைதராபாத், தர்மசலா என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
IND vs AUS, 3rd ODI: 3ஆவது ஒரு நாள் போட்டி, இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு உண்டு!
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது. இலங்கை அணி இன்று தங்களது அணியை அறிவித்தது.
Cricket World Cup 2023: கபில் தேவ் கடத்தப்பட்டது எதற்காக? இதோ வெளியானது உண்மையான காரணம்!
ஆனால், தொடர்ந்து வங்கதேச அணி வீரர்களிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இதுவரையில் வங்கதேச அணி மட்டுமே வீரர்களை அறிவிக்கவில்லை. வரும் 28 ஆம் தேதி நாளை மறுநாள் தான் வீரர்களை உறுதி செய்ய கடைசி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், நாளை வங்கதேச அணி தங்களது வீரர்களை அறிவித்து உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகளில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் வார்ம் அப் போட்டியில் ஒவ்வொரு அணியும் இடம் பெற்று விளையாடுகின்றன. இதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
தேதி | அணி 1 | அணி 2 | இடம் | நேரம் |
செப்டம்பர் 29 | வங்கதேசம் | இலங்கை | கவுகாத்தி | 2 மணி |
செப்டம்பர் 29 | தென் ஆப்பிரிக்கா | ஆப்கானிஸ்தான் | திருவனந்தபுரம் | 2 மணி |
செப்டம்பர் 29 | நியூசிலாந்து | பாகிஸ்தான் | ஹைதராபாத் | 2 மணி |
செப்டம்பர் 30 | இந்தியா | இங்கிலாந்து | கவுகாத்தி | 2 மணி |
செப்டம்பர் 30 | ஆஸ்திரேலியா | நெதர்லாந்து | திருவனந்தபுரம் | 2 மணி |
அக்டோபர் 02 | நியூசிலாந்து | தென் ஆப்பிரிக்கா | திருவனந்தபுரம் | 2 மணி |
அக். 02 | இங்கிலாந்து | வங்கதேசம் | கவுகாத்தி | 2 மணி |
அக். 03 | ஆப்கானிஸ்தான் | இலங்கை | கவுகாத்தி | 2 மணி |
அக். 03 | இந்தியா | நெதர்லாந்து | திருவனந்தபுரம் | 2 மணி |
அக். 03 | பாகிஸ்தான் | ஆஸ்திரேலியா | ஹைதராபாத் | 2 மணி |
Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!
இந்த வார்ம் அப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் லைட் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.