புதிய ஐபிஎல் அணியில் இணைய போவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் போட்டிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு 3ஆவது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 4ஆவது போட்டியை டிரா ஆக்கியது. இதே போன்று முதல் ஒரு நாள் போட்டியில் தோற்ற ஆஸ்திரேலியா மற்ற 2 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி வாகை சூடியது.
ரோகித் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இதைத் தொடர்ந்து வரும் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை முன் பதிவு செய்யாத நிலையில், அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நமஸ்தே இந்தியா, உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான தகவல் ஒன்று உள்ளது. ஆம், இந்த ஐபிஎல் 2023 தொடரில் நான் இணைகிறேன். பரபரப்பான, உணர்ச்சிமிக்க அணியில் நான் இணைகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
குண்டா இருக்க, போய் சாப்பிடு; பாகிஸ்தான் வீரரை சைகையால் உருவ கேலி செய்த ரசிகர்; வைரலாகும் வீடியோ!
ஆனால், எந்த அணியில் அவர் இணைகிறார் என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு மாற்று வீரர்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தான் ஸ்டீவ் ஸ்மித் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த தொடரில் சில ஆஸ்திரேலிய வீரர்கள் வர்ணனையாளர்கள் களம் இறங்குகின்றனர். அதே போன்று ஸ்டீவ் ஸ்மித்தும் வர்ணனையாளராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித் விலை போகாத நிலையில் இந்த ஆண்டுக்கான ஏலத்திற்காக அவர் முன்பதிவு செய்வில்லை என்று கூறப்படுகிறது. இதுவரையில் ஸ்டீவ் ஸ்மித் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். இதுவரையில் 103 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் ஒரு சதம், 11 அரைசதங்கள் உள்பட 2485 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். ஒரு முறை மட்டும் இவரது தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணி ஐபிஎல் தொடரில் 2ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
WPL 2023 Award Winners: விருது பெற்றவர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டது தெரியுமா?