மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.214 கோடி என்று கூறப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் ஆகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட 4 முறை தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ரோகித் சர்மா கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரையில் தனது பேட்டில் பல நிறுவனங்களை முன்னிலைப் படுத்தியுள்ளார். இதற்காக கோடிக்கணக்கில் அவருக்கு வருமானம் வருகிறது.
குண்டா இருக்க, போய் சாப்பிடு; பாகிஸ்தான் வீரரை சைகையால் உருவ கேலி செய்த ரசிகர்; வைரலாகும் வீடியோ!
பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்கள் மூலமாகவும், ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் மூலமாகவும் விளம்பரங்களில் வலம் வருகின்றனர். அந்த வகையில் ரோகித் சர்மா பல்வேறு வகைகளின் பிராண்டுகளை முன்னிலைப் படுத்துகிறார். அதில் ரிபோக், சியாட், டான் உள்ளிட்ட பேட் ஸ்பான்சர் ஒப்பந்தங்களும் உண்டு.
ரிபோக், எம்ஆர்எஃப்:
கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் ரிபோக் நிறுவனத்தின் பேட்டை பயன்படுத்தினார். அதில் ஆரம்பத்தில் கருப்பு நிறத்திலும், அதன் பிறகு நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்டதாக ரிபோக் நிறுவனம் பேட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் எம்ஆர்எஃப் பேட்டை பயன்படுத்தினார். அதன் பிறகு டான் ஆக் மாறினார். டான் பேட்டை பயன்படுத்தி விளையாடி வந்தார். இது அவருக்காகவே தயாரிக்கப்பட்டது. அவரை டான் ரோகித், ஹிட் மேன் ரோகித் என்றே பலரும் அழைத்தனர்.
WPL 2023 Award Winners: விருது பெற்றவர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டது தெரியுமா?
கடந்த 2013 ஆம் ஆண்டு அடிடாஸ் நிறுவன பேட்டை பயன்படுத்தினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு சியாட் நிறுவனத்தின் பேட்டை பயன்படுத்தி விளையாடி வருகிறார். இதற்காக அவர் ஒரு ஆண்டுகளுக்கு ரூ.3 கோடி பெறுகிறார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நிறுவனம் வெளியிட்டது. அதில் ரோகித் சர்மா ரூ.7 கோடி சம்பளம் வாங்கும் ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ரோகித் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.215 கோடி என்று கூறப்படுகிறது.
ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக இடைக்கால கேப்டனாகும் ஷர்துல் தாக்கூர், உண்மையாவா?