ரோஹித் கேம்ப், கோலி கேம்ப்னு 2 கேங்கா பிரிந்த இந்திய அணி..! சாமர்த்தியமாக கையாண்ட சாஸ்திரி

By karthikeyan VFirst Published Feb 4, 2023, 5:20 PM IST
Highlights

2019 ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு ரோஹித் சர்மா கேம்ப் மற்றும் விராட் கோலி கேம்ப் என்று இந்திய அணி 2 குழுக்களாக பிரிந்திருப்பதாக தகவல் பரவிய நிலையில், அந்த சர்ச்சையை ரவி சாஸ்திரி கையாண்ட விதம் குறித்து முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெளிவுபடுத்தியுள்ளார்.
 

இந்திய அணியின் இரு துருவங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி. சமகாலத்தின் மிகச்சிறந்த வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர்கள்; நட்சத்திர வீரர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் என்ற பேச்சு ஒரு கட்டத்தில் பரபரப்பாக இருந்த நிலையில், அதையெல்லாம் கடந்து வந்துவிட்டது இந்திய அணி.

2019ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. அந்த சமயத்தில் இந்திய அணி, ரோஹித் சர்மா கேம்ப் மற்றும் விராட் கோலி கேம்ப் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், இருவருக்கும் இடையே பனிப்போர் இருப்பதாகவும் பேசப்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதுடன், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஆனால் அந்த விவகாரத்தை அப்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வளரவிடாமல் தடுத்து எப்படி கையாண்டார் என்பது குறித்து, தனது கோச்சிங் பியாண்ட் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்.

IND vs AUS: அஷ்வின் மாதிரி ஒரு ஸ்பின்னரை வைத்து வெறித்தனமா பயிற்சி செய்யும் ஆஸ்திரேலிய வீரர்கள்! வைரல் வீடியோ

இதுகுறித்து எழுதியுள்ள ஸ்ரீதர், 2019 உலக கோப்பைக்கு பின் ரோஹித் கேம்ப், கோலி கேம்ப் என்று இந்திய அணி 2 பிரிவுகளாக பிரிந்திருப்பதாக தகவல் பரவியது. இந்தமாதிரி வெளியே பேசப்படுவது குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளத்தில் யாரோ ஒருவர் மற்றொருவரை அன்ஃபாலோ செய்ததாகவும் கூறப்பட்டது. 

அந்த உலக கோப்பைக்கு பின் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஆடுவதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்தோம். அப்போது ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் அழைத்த ரவி சாஸ்திரி, நீங்கள் இருவரும் அணியின் மூத்த வீரர்கள். எனவே இதுமாதிரியான செய்திகளுக்கு உரமூட்டும் வகையில் நடந்துகொள்ளாமல், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்போதுதான் ஒரு அணியாக நாம் வளர முடியும் என்று அவருக்கே உரிய தொனியில் இருவரிடமும் பேசினார். 

IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்

அதன்பின்னர் இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வந்துவிட்டது. ரவி சாஸ்திரி சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து சிறப்பாக கையாண்டார். இருவரையும் ஒன்றாக அமர்ந்து பேசவைத்தார் என்று ஸ்ரீதர் தெரிவித்தார்.
 

click me!