BBL: ஃபைனலில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த பிரிஸ்பேன் ஹீட்

By karthikeyan VFirst Published Feb 4, 2023, 3:46 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் 175 ரன்களை குவித்து, 176 ரன்கள் என்ற சவாலான இலக்கை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது. 
 

பிக்பேஷ் டி20 லீக் தொடரின் ஃபைனல் இன்று பெர்த்தில் நடந்துவருகிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதும் ஃபைனலில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பிரிஸ்பேன் ஹீட் அணி:

சாம் ஹீஸ்லெட், ஜோஷ் பிரௌன், நேதன் மெக்ஸ்வீனி, சாம் ஹைன், ஜிம்மி பியர்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மேக்ஸ் பிரயண்ட், மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பேஸ்லி, சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ குன்னெமேன்.

IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

ஸ்டீஃபன் எஸ்கினாஸி, கேமரூன் பான்கிராஃப்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), நிக் ஹாப்சன், கூப்பர் கானாலி, ஆண்ட்ரூ டை, டேவிட் பெய்ன், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், மேத்யூ கெல்லி.
 
முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் பிரௌன் அதிரடியாக ஆடி 12 பந்தில் 25 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு சாம் ஹீஸ்லெட் மற்றும் மெக்ஸ்வீனி இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 79 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ஹீஸ்லெட் 34 ரன்களும், மெக்ஸ்வீனி 41 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் மேக்ஸ் பிரயண்ட் அதிரடியாக ஆடி 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்தார். சாம் ஹைன் 21 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் பார்ட்லெட் சிக்ஸர் அடித்து முடிக்க, 20 ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணி 175 ரன்கள் அடித்துள்ளது.

பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறது இந்திய அணி - ரமீஸ் ராஜா

4 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வெற்றி பெற 176 ரன்கள் அடிக்க வேண்டும்.
 

click me!