நெற்றியில் திலகமிட மறுப்பு தெரிவித்த சிராஜ், உம்ரான்: டுவிட்டரில் நடக்கும் கடுமையான விவாதம்!

Published : Feb 04, 2023, 03:04 PM IST
நெற்றியில் திலகமிட மறுப்பு தெரிவித்த சிராஜ், உம்ரான்: டுவிட்டரில் நடக்கும் கடுமையான விவாதம்!

சுருக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வெற்றிகரமாக இந்திய அணி முடித்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து பெங்களூருவில் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்திய அணியும் நாக்பூருக்கு வருகை தந்துள்ளது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதி - அன்ஷா திருமண புகைப்படங்கள்!

நாக்பூர் வந்த இந்திய அணிக்கு அவர்கள் தங்கும் ஹோட்டலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வீரர்களுக்கு நெற்றியில் திலகமிடப்பட்டது. அதில், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் நெற்றியில் திலகமிட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், விக்ரம் ரத்தோர், ஹரி பிரசாத் மோகன், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் நெற்றியில் திலகமிட மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தற்போது டுவிட்டரில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!

முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு தேசத்தை விட அவர்களது மதம் தான் முக்கியம் என்று பலரும் டுவிட்டரில் குறிப்பிட்டு வருகின்றனர். ஏற்கனவே நீங்கள் உங்களது திறமையின் மூலமாக நாட்டிற்கு நிரூபித்துவிட்டீர்கள். இது போன்ற ஒரு சின்ன விஷயத்தால் நீங்கள் உங்களது நாட்டை நேசிக்கிறீர்களா? இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஒரு சிலர் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக்கிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத் அதிர்ச்சி தோல்வி!

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்

ஆஸ்திரேலியா:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அஸ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கரே, கேமரூன் க்ரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஸ் ஹசல்வுட், டிரேவிஸ் ஹெட், உஸ்மான் ஹவாஜா, மார்னஸ் லபுசேஞ்ச், நாதன் லயன், லான்ஸ் மோரிஸ், டோட் முர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வீப்சன், டேவிட் வார்னர்.

 

 

 

 

 

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி