ரஞ்சி டிராபி: காலிறுதியில் பஞ்சாப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது சௌராஷ்டிரா

By karthikeyan VFirst Published Feb 4, 2023, 2:56 PM IST
Highlights

ரஞ்சி டிராபி அரையிறுதியில் பஞ்சாப் அணியை  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
 

ரஞ்சி தொடர் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, பெங்கால், ஆந்திரா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், சௌராஷ்டிரா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதியில் ஜார்கண்ட்டை வீழ்த்தி பெங்கால் அணியும், உத்தரகண்ட்டை வீழ்த்தி கர்நாடகா அணியும், ஆந்திராவை வீழ்த்தி மத்திய பிரதேச அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

சௌராஷ்டிரா - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஸ்னெல் படேல் சிறப்பாக ஆடி 70 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 9ம் வரிசையில் இறங்கிய டெயிலெண்டர் பார்த் பூட் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். பார்த் பூட் 111 ரன்களை குவிக்க, சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் அடித்தது.

IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் நமன் திர் ஆகிய இருவருமே அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களையும், நமன் திர் 131 ரன்களையும் குவித்தனர். கேப்டன் மந்தீப் சிங் சிறப்பாக ஆடி 91 ரன்கள் அடித்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் அணி 431 ரன்களை குவித்தது. 

128 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய சௌராஷ்டிரா அணியில் வசவடா(77), சிராக் ஜானி(77), பிரெரக் மன்கத்(88) மற்றும் பார்த் பூட்(51) ஆகிய நால்வரும் அரைசதம் அடிக்க, 2வது இன்னிங்ஸில் சௌராஷ்டிரா அணி 379 ரன்களை குவித்தது. 

சௌராஷ்டிரா அணி 251 ரன்கள் முன்னிலை பெற, 252 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி,71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஜெயித்த சௌராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறது இந்திய அணி - ரமீஸ் ராஜா

அரையிறுதியில் கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளும், பெங்கால் - மத்திய பிரதேச அணிகளும் மோதுகின்றன.
 

click me!