IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்

Published : Feb 03, 2023, 10:07 PM IST
IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.  

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதும். 75.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி. 58.93 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, அந்த இடத்தை வலுவாக தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 2-1 அல்லது 3-1 என வெல்ல வேண்டும். எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். 

IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்

முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரோஹித்துடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக இறங்குவார். அதன்பின்னர் வழக்கம்போல புஜாரா, கோலி ஆடுவார்கள். ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட்டிலிருந்து காயத்தால் விலகியதால் சூர்யகுமார்யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.  விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் ஆடுவார்.

ஸ்பின்னர்களாக ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் ஆகியோருடன் குல்தீப் யாதவும் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறது இந்திய அணி - ரமீஸ் ராஜா

இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!