ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அவசர மீட்டிங்.. பஹ்ரைன் பறந்த ஜெய் ஷா..!

By karthikeyan VFirst Published Feb 3, 2023, 11:10 PM IST
Highlights

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பஹ்ரைன் சென்றுள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று ஆட அனுமதிப்பதில்லை.

2012ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடவில்லை. 2006ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ  அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்

அடுத்த ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியும். ஆனால் இந்திய அரசு அனுமதியளிக்க வாய்ப்பேயில்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதை பிசிசிஐயுமே விரும்பவில்லை. அதனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பலம் வாய்ந்த கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ தான் என்ற வகையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்காது; இந்தியா - பாகிஸ்தானுக்கு பொதுவான இடத்தில் தான் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

ஜெய் ஷாவின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிருப்தியடைய செய்தது. பிசிசிஐ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இதுபோன்று அறிவிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க பஹ்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பஹ்ரைனுக்கு சென்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதில்லை என்ற பிசிசிஐயின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

IND vs AUS: ஆஸ்திரேலியாகாரன் பயந்துட்டான்.. இதுதான் அதுக்கு சாட்சி..! தெறிக்கவிடும் கைஃப்

ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் இழக்க விரும்பாவிட்டால், ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்றும், ஒருவேளை பாகிஸ்தான் அமீரகத்தில் நடத்த ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
 

click me!